< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல்  - தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம்

தினத்தந்தி
|
1 April 2024 9:30 AM GMT

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவிஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சத்யபிரதா சாகு தலைமையில் 4-ம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், நாளை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்