இன்று ஓடிடியில் வெளியான படங்கள்
|'மலையாளி பிரம் இந்தியா' படம் ஓடிடியில் இன்று வெளியானது.
சென்னை,
மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் மார்க்கெட் மகாலட்சுமி. பிரணீகா அன்விகா, ஹர்ஷ வர்தன், முக்கு அவினாஷ், மகபூப் பாஷா, கேதார் சங்கர், ஹர ஸ்ரீநிவாஸ் மற்றும் ரஷ்மிதா பந்தகனி ஆகியோர் நடித்தனர். இப்படத்தை இயக்குனர் வி.எஸ் முகேஷ் இயக்கினார்.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. மேலும், பல படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன் விவரம் இதோ,
ஆஹா:
மார்க்கெட் மகாலட்சுமி (market mahalakshmi)
ஹரா (Harra)
நெட்பிளிக்ஸ்:
டெஸ்பரேட் லைஸ் (Desperate Lies)
கோயோ (Goyo)
அமேசான் பிரைம்:
மிர்சாபூர் சீசன் 3 (Mirzapur Season 3)
ஹரா (Harra)
ஜியோ சினிமா:
ஹி வெண்ட் தட் வே (He Went That Way)
சோனி லிவ்:
மலையாளி பிரம் இந்தியா (Malayali From India)