< Back
ஓ.டி.டி.
Tamil Film Maharaja OTT Releases In July
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மகாராஜா'

தினத்தந்தி
|
3 July 2024 11:11 AM IST

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "மகாராஜா"படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்தபடத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. இந்தநிலையில், மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மகாராஜா படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் வரும் 19-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்