< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓடிடியில் வெளியான 'பகலறியான்'
|1 July 2024 5:44 PM IST
'பகலறியான்' படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழில் '8 தோட்டாக்கள்', 'ஜீவி' ஜோதி', 'மெமரீஸ்' மற்றும் 'பம்பர்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் திரைப்பட ரசிகர்களை ஈர்த்தவர் வெற்றி. தற்போது 'பகலறியான்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மே மாதம் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் அக்சயா கந்தமதன் நாயகியாகவும், சாய் தீனா, சாப்ளின் பாலு, முருகன் மற்றும் வினு பிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் லதா முருகன் ராஜ் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். விவேக் சரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான திரில்லர் படமாக இருக்கும் இது, ஒரே இரவில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டது. இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடியில் இப்படம் வெளியானது. இப்படத்தில் பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.