< Back
ஓ.டி.டி.
Mammoottys Turbo OTT Release Date Confirmed OTT
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் மம்முட்டியின் 'டர்போ'

தினத்தந்தி
|
3 July 2024 3:32 PM IST

மம்முட்டி நடிப்பில் வெளியான 'டர்போ' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டர்போ'. இப்படத்தை வைசாக் இயக்கினார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து 'புலிமுருகன்' திரைப்படத்தை இயக்கினார். 'டர்போ' படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதி இருந்தார். இதில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர், சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்த இப்படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தபடத்தில் ராஜ் பி. ஷெட்டி மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்நிலையில், 'டர்போ' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'டர்போ' படம் சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் வரும் 12-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மம்முட்டி நடிப்பில் வெளியான 'பிரம்மயுகம்' என்ற திகில் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்