கல்கி 2898 ஏ.டி படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்
|பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் பிரபாஸ் உடன் புஜ்ஜி என்ற காரும் படத்தில் பயணம் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் போன்ற பீரியாடிக் படங்களை அமேசான் பிரைம் தான் வாங்கி வருகிறது. இந்நிலையில், கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தையும் பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டரில் படம் போடும் போதே டிஜிட்டல் பார்ட்னர் அமேசான் பிரைம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் கொடுத்து பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 600 கோடி பட்ஜெட்டில் ஓ.டி.டி உரிமமே 200 கோடி லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவை 100 கோடிக்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்கி 2898 ஏ.டி நிச்சயம் 4 வாரத்தில் வெளியாகாது என்றும் 8 வாரம் கழித்துத் தான் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. ஜூலை 27ம் தேதி வெளியாகி உள்ள இந்த படம் செப்டம்பர் 26-ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.