ஓ.டி.டியில் வெளியாகும் அஞ்சலி நடிக்கும் வெப் தொடர்
|அஞ்சலி நடித்த 'பஹிஷ்கரனா' வெப் தொடரின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அஞ்சலி. இவர் 'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', 'நாடோடிகள்-2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் 'பஹிஷ்கரனா' என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இந்த தொடரை முகேஷ் பிரஜாபதி இயக்கியுள்ளார். ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். அதில் இந்த தொடர் வருகிற 19-ந் தேதி ஜீ-5 ல் வெளியாகும் என பிக்சல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'கேங்க்ஸ் ஆப் கோதாவரி' படத்திற்குப் பிறகு அஞ்சலி மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.