ஓடிடியில் வெளியாகும் அகில் அக்கினேனியின் 'ஏஜென்ட்'?
|மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்த 'ஏஜென்ட்' படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ராமபிரம்மம் சுங்கரா தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவான படம் 'ஏஜென்ட்'. இந்த படம் கடந்த வருடம் ஏப்ரலில் வெளியானது. இந்தப் படத்திற்கான கதையை வக்கன்தம் வம்சி எழுதியுள்ளார். ஸ்டைலிஷ் ஆக்சன் படமான இதற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மம்முட்டி, டினோ மோரியா மற்றும் சாக்சி வைத்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
பொதுவாக தெலுங்கு படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடி தளத்தில் வெளியாகி விடும். ஆனால் சில சமயங்களில் திரையரங்குகளில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால், ஒரு மாதத்திற்கும் மேல் நீட்டிப்பார்கள். ஆனால் அகில் அக்கினேனியின் 'ஏஜென்ட்' படம் திரையரங்குகளுக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆனால் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படவில்லை.
தற்போது இந்த படத்திற்கான ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த மாத இறுதிக்குள் ஓடிடி தளத்தில் 'ஏஜென்ட்' படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.