தமிழகத்தில் இன்று 65 திருக்கோவில்களில் கும்பாபிஷேக விழா
|பாம்பன் சுவாமிகள் திருக்கோவில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட 65 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 7.5.2021 முதல் 11.7.2024 வரை 1,856 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோவில் உள்ளிட்ட 65 திருக்கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவில்களில் சென்னை, சேத்துப்பட்டு, கருகாத்தம்மன் கோவில், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் கோவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோவில், கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோவில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்து மாரியம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம், சுந்தர விநாயகர் கோவில், ஆகிய கோவில்களும் அடங்கும்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள https://x.com/dinathanthi