இந்த வார விசேஷங்கள்: 4-6-2024 முதல் 10-6-2024 வரை
|சுவாமிமலையில் நாளை மறுதினம் முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
4-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* அகோபிலமடம் திருமத் 39-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் உலா.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு
* கீழ்நோக்கு நாள்.
6-ந் தேதி (வியாழன்)
*அமாவாசை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (வெள்ளி)
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (சனி)
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார் குடி ராஜகோபால சுவாமி, திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருநள்ளார் சனி பகவானுக்கு அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு திருமஞ்சன சேவை.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்,
* சமநோக்கு நாள்.
10-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.