< Back
உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 4:36 PM IST

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹொனிரா,

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாலமன் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பவளப்பாறை 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானது என்றும், வானில் இருந்து பார்க்கும்போதும் பவளப்பாறை தெரியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பவளப்பாறைகள் பெரும் பங்காற்றுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் தற்போது ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் உலக வெப்பமயமாதல் இந்த பவளப்பாறைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்