< Back
உலக செய்திகள்
சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

Photo Credit: Reuters

உலக செய்திகள்

சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

தினத்தந்தி
|
9 Dec 2024 11:34 AM IST

மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

டமாஸ்கஸ்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல்-அசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அவர் ரஷியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' கிளர்ச்சியாளர்கள் வசம் தற்போது சிரியா சென்றுள்ள நிலையில், சிரியா பிரதமர் முகமது காசி ஜலாலி வெளியிட்ட வீடியோ பதிவில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கவும், ஒரு இடைக்கால அரசை நிறுவவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர், கிளர்ச்சி குழுவின் தலைவர்களை தொடர்பு கொண்டதாகவும், அடக்குமுறைகள் இருக்காது என்று கிளர்ச்சியாளர்கள் உறுதி அளித்ததாகவும் கூறினார்.

சிரியா கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் சென்ற நிலையில், அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் பி 52, எப் 15 எஸ், ஏ-10 எஸ் ஆகிய போர் விமானங்கள் மத்திய சிரியாவில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்