அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? பிரபல ஜோதிடர் கணிப்பு
|அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்,நவம்பர் 5ல் நடக்க உள்ளது. இந்த நாளிற்காக அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார்? என்பதை தீர்மானிக்கப் போகும் நாள். இதற்கான பிரசாரம் தற்போதே சூடுபிடித்துள்ள நிலையில்,
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. துணை அதிபர் கமலா ஹாரிஸ்( 59), ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார். அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என அவர், கணித்து உள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்குவார் என கடந்த 2020ம் ஆண்டில் ஜோதிடர் எமி ட்ரிப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.