< Back
உலக செய்திகள்
ஷேக் ஹசீனா எங்கே? - கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு
உலக செய்திகள்

ஷேக் ஹசீனா எங்கே? - கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு

தினத்தந்தி
|
9 Oct 2024 12:19 AM IST

ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார். இந்தியாவில் தஞ்சமடைந்த அவர், சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், உள்நாட்டு போராட்டங்களால் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு தப்பிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன் தகவல் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா குறித்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அரசிடம் கேட்டதாகவும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்