< Back
உலக செய்திகள்
மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்
உலக செய்திகள்

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்

தினத்தந்தி
|
6 Nov 2024 7:01 AM IST

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

Live Updates

  • 6 Nov 2024 2:21 PM IST

    டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் என்றும் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கமாக அமையட்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் அமெரிகா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  • 6 Nov 2024 2:18 PM IST

    போர்களை நிறுத்துவேன் - டிரம்ப் சூளுரை

    போர்களை தொடங்க மாட்டேன்; நிறுத்துவேன் என்று அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், நமக்கு வலிமையான, அதிகாரமிக்க ராணுவம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

  • 6 Nov 2024 2:07 PM IST

    அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் - டிரம்ப்
    6 Nov 2024 1:29 PM IST

    அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் - டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப்,

    இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம், இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.

  • 6 Nov 2024 1:04 PM IST

    மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் டொனால்டு  டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று டிரம்ப் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

     

    கொண்டாட்டம்

    டிரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் - (51.2 சதவீதம் வாக்குகள்)

    ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். - (47.4 சதவீதம் வாக்குகள்)

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.

     


    அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவைகளை தக்கவைத்துள்ள குடியரசுக் கட்சி

    குடியரசு கட்சி 51-49 என்ற பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. வெஸ்ட் வெர்ஜீனியா, ஒகாயோ மாநிலங்களில் வெற்றி பெற்றதால் செனட் சபை குடியரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளது.

    டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளநிலையில், அவர் நீதிபதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் நியமிப்பதற்கு செனட் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினரால் உதவமுடியும்.

    அடுத்தடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதால் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தல் - 2 இந்தியர்கள் வெற்றி
    6 Nov 2024 12:52 PM IST

    மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தல் - 2 இந்தியர்கள் வெற்றி

    மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் இதுவரை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்கா இலினாய்ஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தியும், விர்ஜினியா மாகாணத்தில் சுகாஸ் சுப்பிரமணியனும் வெற்றி பெற்றுள்ளனர். சுகாஸ் சுப்பிரமணியத்தின் தந்தை சென்னையையும், தாய் பெங்களூருவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • டிரம்ப் முன்னிலை - ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
    6 Nov 2024 12:46 PM IST

    டிரம்ப் முன்னிலை - ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • 6 Nov 2024 11:52 AM IST

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வெற்றியை நெருங்கும் டொனால்டு டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 247 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் (27 மாகாணங்களில் வெற்றி) - (51.1 சதவீதம் வாக்குகள்)

    ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். (19 மாகாணங்களில் வெற்றி) - (47.4 சதவீதம் வாக்குகள்)

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

  • 6 Nov 2024 10:35 AM IST

    பரபரப்பாகும் தேர்தல் களம்... கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே கடும் போட்டி

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் (24 மாகாணங்களில் வெற்றி) - (51 சதவீதம் வாக்குகள்)

    ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறார் (15 மாகாணங்களில் வெற்றி) - (47.6 சதவீதம் வாக்குகள்)

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

  • 6 Nov 2024 10:35 AM IST

    முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்தான் மீண்டும் வருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜோ பைடன் நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்