< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 53 பேர் பலி

26 Feb 2025 8:41 AM IST
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கின்ஷாசா,
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.