< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 12 பேர் பலி
|24 Dec 2024 3:03 PM IST
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
அங்காரா,
துருக்கி நாட்டின் பிலிகிசர் மாகாணம் கரிசி நகரில் ராணுவ ஆயுதங்களுக்கு தேவையான வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.