< Back
உலக செய்திகள்
அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு
உலக செய்திகள்

அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு

தினத்தந்தி
|
1 Dec 2024 4:32 PM IST

பிரிக்ஸ் அமைப்பு 'சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய கரன்சி உருவாக்க முயற்சித்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும்' என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அதன் உறுப்பு நாடுகளான ரஷியா மற்றும் சீனா அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க முயற்சி செய்கின்றன. டாலரை மாற்றும் முயற்சிக்கு, அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

அவர்கள் அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறும் நிலை ஏற்படும். அவர்கள் டாலரை மாற்ற பல்வேறு வழிகளை தேடலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் அமைப்பு மாற்றும் வாய்ப்பு இல்லை. எந்த நாடும் அமெரிக்காவின் டாலரை மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்