< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி...பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம்
|2 Dec 2024 2:40 PM IST
பாகிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பீரங்கி குண்டு வெடித்ததில் 2 சகோதரகள் உள்பட 3 சிறுவர்கள் உயிரிழந்ந்தனர். இந்த சம்பவம் பன்னுவின் வாசிர் உட்பிரிவின் ஜானி கேல் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மதப்பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது கைவிடப்பட்ட பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளனது. அதை அவர்கள் பொம்மை என்று நினைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.