சென்னை
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2025 6:58 PM IST
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சர் சிவங்கர் கூறியுள்ளார். ரெயில் பாதை திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கைவிட கோரியதாகவும் அதனால், கைவிடப்பட்டதாக்வும் ரெயில்வே அமைச்சர் கூறியதாக நேற்று செய்தி வெளியானது.
- 11 Jan 2025 6:28 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ள்னார். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
- 11 Jan 2025 5:49 PM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. கைது
*மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு சார்பு ஆய்வாளர் சிறையில் அடைப்பு
*திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இடத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்
- 11 Jan 2025 5:25 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
- 11 Jan 2025 4:41 PM IST
துபாய் ரேஸில் இருந்து அஜித் விலகல்
துபாய் ரேஸில் அஜித் கார் ஓட்டப்போவது இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ரேஸில் அஜித் குமாரின் அணி தொடர்ந்து போட்டியிடும் எனவும் அணியின் வெற்றி வாய்ப்பு, அஜித்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் கார் அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 11 Jan 2025 4:05 PM IST
ஜனவரியிலேயே ரிலீஸ் ஆகிறதா விடாமுயற்சி?
தனது ஒரு படம் ஜனவரியிலும் இன்னொரு படம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலும் ரிலீஸ் ஆக இருப்பதாக கார் ரேஸ் களத்தில் இருந்து நடிகர் அஜித் தகவல்.
பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாத விடாமுயற்சி ஜனவரி கடைசியில் வெளியாக வாய்ப்பா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- 11 Jan 2025 3:26 PM IST
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- 11 Jan 2025 2:58 PM IST
போட்டியை பார்க்க எனது ரசிகர்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களில் அன்பு அளப்பறியது - கார் பந்தய களத்தில் இருந்து நடிகர் அஜித் பேட்டி