< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
உலக செய்திகள்

அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

தினத்தந்தி
|
17 Dec 2024 5:30 AM IST

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடத்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலவி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

அதேவேளை, துப்பாக்கி சூடு நடத்தியது சிறுவன் என்பதும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவனும் உயிரிழந்துவிட்டான் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்