< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்:  பெண் படுகொலை; 3 பேர் காயம்
உலக செய்திகள்

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: பெண் படுகொலை; 3 பேர் காயம்

தினத்தந்தி
|
4 Aug 2024 2:52 PM IST

பாலஸ்தீனிய பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 70 மற்றும் 68 வயது நபர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் இன்று காலை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பெண் (வயது 66) ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதுதவிர, 3 பேர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர். மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனிய பயங்கரவாதி இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார் அந்நபரை சுட்டுள்ளனர். எனினும், அந்நபரின் நிலைமை உடனடியாக தெரிய வரவில்லை.

பயங்கரவாதியின் தாக்குதலில் காயமடைந்த நபர்களில் 70 வயது முதியவர் மற்றும் 68 வயது நபர் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 வயது நபரும் சிகிச்சையில் உள்ளார்.

முதல் தாக்குதல் ஆனது, மோஷே தயான் தெருவில் பூங்கா நுழைவிட பகுதியில் நடந்தது. இதில், அந்த பெண் குத்தி கொல்லப்பட்டார். 68 வயது நபர் படுகாயமடைந்து உள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், காயமடைந்த 3 பேரும் வேறு வேறு இடங்களில் தாக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இடையே 500 மீட்டர் இடைவெளி உள்ளது. இதனால், அவர்களை மீட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என மேகன் டேவிட் ஆடம் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பின் மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்