< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
|14 Nov 2024 12:20 AM IST
இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.
கொழும்பு,
இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் அநுர குமாரா திசநாயக்க புதிய அதிபராக தேர்தவாகியுள்ளார். இந்தநிலையில் இலங்கையின் 17-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த சற்று நேரத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 70 ஆயிரம் பொலீசார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளே நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே, அநுர குமாரா திசநாயகா கட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.