< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கை அதிபர் திசநாயகா இன்று இந்தியா வருகை
|15 Dec 2024 3:15 AM IST
இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார்.
கொழும்பு,
இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அந்த நாட்டின் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார். இந்தநிலையில் இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு அவர் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது அவர் இருநாடுகளிடையே நிலவும் மீனவ பிரச்சினை, எதிர்க்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.