< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தினேஷ் குணவர்த்தனே
|23 Sept 2024 10:37 AM IST
இலங்கை பிரதமர் பதவியை தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார்.
கொழும்பு,
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா குமார திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், அனுரா குமார திசநாயகே அபார வெற்றிபெற்றார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே படுதோல்வியடைந்தார்.
இதனிடையே, இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தனே செயல்பட்டு வந்தார். 75 வயதான குணவர்த்தனே 2022 ஜூலை முதல் இலங்கை பிரதமராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே வெற்றிபெற்ற நிலையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்த்தனே தற்போது ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு அமைய உள்ளதையடுத்து தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.