< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உதயநிதி ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் வாழ்த்து
|29 Sept 2024 6:21 PM IST
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும். உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.