< Back
உலக செய்திகள்
இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை
உலக செய்திகள்

இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

தினத்தந்தி
|
1 Oct 2024 9:35 AM IST

35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றை காண ஏராளமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு பயணிக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்