< Back
உலக செய்திகள்
குரோஷியாவில் ஆசிரியர், மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் பலி
உலக செய்திகள்

குரோஷியாவில் ஆசிரியர், மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் பலி

தினத்தந்தி
|
20 Dec 2024 4:54 PM IST

குரோஷியா நாட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சாக்ரெப்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப் அருகே, ஒரு இளைஞர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்