< Back
உலக செய்திகள்
ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கு மேலும் 6 மாதங்கள் தடை நீட்டிப்பு
உலக செய்திகள்

ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கு மேலும் 6 மாதங்கள் தடை நீட்டிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2024 3:13 PM IST

ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

கடந்த 2022-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷியாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிசம்பர் 31, 2024 வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல் விதைகளைத் தவிர, அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு, ஜூன் 30, 2025 வரை நீட்டித்து ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் யூரேசியன் பொருளாதார ஒன்றியம், அப்காசியா, தெற்கு ஒசேட்டியா, அத்துடன் மனிதாபிமான உதவிகள் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்