< Back
உலக செய்திகள்
சுலோவக்கியா பிரதமர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
உலக செய்திகள்

சுலோவக்கியா பிரதமர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தினத்தந்தி
|
31 May 2024 10:20 AM GMT

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த சுலோவக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

பிரடிஸ்லாவா,

மத்திய ஐரோப்பிய நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர், கடந்த 15-ந்தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் உரையாடி கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் ராபர்ட் பிகோவின் வயிற்றில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளை அகற்ற அவருக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதமரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், உடல்நலம் தேறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து பிரதமர் ராபர்ட் பிகோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

மேலும் செய்திகள்