< Back
உலக செய்திகள்
சிறையில் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண் அதிகாரி - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
உலக செய்திகள்

சிறையில் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண் அதிகாரி - வீடியோ வெளியாகி அதிர்ச்சி

தினத்தந்தி
|
2 July 2024 12:50 PM IST

சிறையில் கைதியும், பெண் அதிகாரியும் பாலியல் உறவில் இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலையில் பணியாற்றிய லிண்டா டி சவுசா அப்ரு (வயது 31) என்ற பெண் அதிகாரி கைதி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். கைதியின் அறையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்க அதை மற்றொரு கைதி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ வைரலான நிலையில் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண் அதிகாரி லிண்டா தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் செய்திகள்