< Back
உலக செய்திகள்
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் ஆண்டவர் கண்டனம்
உலக செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் ஆண்டவர் கண்டனம்

தினத்தந்தி
|
11 Feb 2025 8:39 PM IST

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரோம்,

அமெரிக்காவின் எல்லை வழியே, அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அந்நாட்டுக்குள் செல்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து, அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது என்றும், இது மோசமாக முடிவைடையும் என்றும் போப் ஆண்டவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதிரியார்களுக்கு எழுதிய கடிதத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச்செல்பவர்களை, பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என்று போப் ஆண்டவர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார். அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்