< Back
உலக செய்திகள்
உடல்நலக்குறைவு எதிரொலி: உதவியாளரை உரையை வாசிக்க சொன்ன போப் ஆண்டவர்
உலக செய்திகள்

உடல்நலக்குறைவு எதிரொலி: உதவியாளரை உரையை வாசிக்க சொன்ன போப் ஆண்டவர்

தினத்தந்தி
|
10 Jan 2025 8:17 AM IST

போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மை காலமாக பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வாடிகனின் வெளியுறவு கொள்கை தொடர்பாக வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வாடிகனில் நேற்று நடந்தது. போப் ஆண்டவரின் உரையை கேட்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்கள் வந்திருந்தனர். அவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது உரையை தொடங்கினார்.

ஆனால் உரையின் சில வரிகளை மட்டுமே வாசித்த போப் ஆண்டவர், தான் சளியால் அவதிப்படுவதாகவும் எனவே தனது உரையை உதவியாளர் வாசிப்பார் என்றும் தெரிவித்தார். அதன்படி போப் ஆண்டவரின் நீண்ட உரையை அவரது உதவியாளர் வாசித்தார். 88 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மை காலமாக வயோதிகம் தொடர்பான பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்