< Back
உலக செய்திகள்
ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உலக செய்திகள்

ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தினத்தந்தி
|
18 Nov 2024 11:59 PM IST

ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரேசிலா,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது.

இதனிடையே, ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டின் டியோடி ஜெனிரோ நகரில் இன்று தொடங்கியது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பைடனை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம்' என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

மேலும் செய்திகள்