உலக செய்திகள்
பிரேசில் பயணத்தை முடித்து கயானா புறப்பட்டார் பிரதமர் மோடி
உலக செய்திகள்

பிரேசில் பயணத்தை முடித்து கயானா புறப்பட்டார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
20 Nov 2024 5:53 AM IST

பிரேசில் பயணத்தை முடித்த பிரதமர் மோடி கயானா புறப்பட்டார்.

பிரேசிலா,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய பிரதமர் மோடி ஜி0 மாநாட்டில் பங்கேற்றார்.

முன்னதாக, நைஜீரியா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். அதன்பின்னர் நைஜீரிய பயணத்தை முடித்து பிரேசில் சென்ற பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்றார்.

இந்நிலையில், பிரேசில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி கயானா புறப்பட்டு சென்றார். கயானா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

50 ஆண்டுகளுக்குப்பின் கயானா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்