அமெரிக்க அதிபர் பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி
|மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டன்,
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குவாட் உச்சி மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆலோசனைக்கு பிறகு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Live Updates
- 22 Sept 2024 4:28 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு குறித்து பேசிய, பிரதமர் மோடி, “ இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்” என்றார்.
- 22 Sept 2024 1:45 AM IST
அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஜோ பைடன் வரவேற்றார். குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- 22 Sept 2024 12:33 AM IST
இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை- ஜோ பைடன்