< Back
உலக செய்திகள்
மங்கோலிய பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

மங்கோலிய பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு

தினத்தந்தி
|
5 July 2024 7:45 PM IST

மங்கோலியாவின் பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலான்பாதர்,

மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 42 இடங்களில் வென்றது. மற்ற 16 இடங்களில் பல்வேறு சிறிய கட்சிகள் வென்றுள்ளன. இதையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன், மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்