< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
பதவிக்காலம் முடிந்ததும் சைக்கிளில் எளிமையாக வெளியேறிய முன்னாள் பிரதமர்

7 July 2024 11:36 AM IST
14 ஆண்டுகாலம் நெதர்லாந்து பிரதமராக மார்க் ரூட் பதவி வகித்தார்.
ஆம்ஸ்டர்டாம்,
நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பிரதமர் அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் எளிமையாக சைக்கிளில் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.