< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் காரை மோத செய்து பயங்கரவாத தாக்குதல்; வீரர் காயம் - வைரலான வீடியோ
உலக செய்திகள்

இஸ்ரேலில் காரை மோத செய்து பயங்கரவாத தாக்குதல்; வீரர் காயம் - வைரலான வீடியோ

தினத்தந்தி
|
8 Dec 2024 2:41 AM IST

இஸ்ரேலில், காரை மோத செய்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை தேடும் பணி நடந்து வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் தெற்கு மேற்கு கரை பகுதியில் ஹெப்ரான் ஹில்ஸ் என்ற இடத்தில், அகதிகள் முகாமுக்கு வெளியே வீரர் ஒருவர் மீது காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த வீரர் காயமடைந்து உள்ளார்.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறும்போது, பாதிக்கப்பட்ட வீரரை மீட்டு பீர்-சேவாவின் சொரோகா மருத்துவ மையத்திற்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை தேடும் பணியும் நடந்து வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

சம்பவத்தின்போது, தாக்குதலில் ஈடுபட்ட காரை நோக்கி படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அந்த பகுதியில் சென்ற பொதுமக்களில் ஒருவரின் கார் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது என கூறப்படுகிறது. காரில் இருந்த ஒருவருக்கு இந்த சம்பவத்தில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்