< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தென்கொரியாவை இணைக்கும் ரெயில் தண்டவாளங்களை தகர்த்த வடகொரியா
|6 Jun 2024 7:47 AM IST
தென்கொரியா-வடகொரியா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
சியோல்,
கொரிய தீபகற்ப நாடுகளான தென்கொரியா-வடகொரியா இடையே பகை உணர்வு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டி வருவதை மேற்கோள் காட்டி வடகொரியா தலைவர் கிம் ஜங் அன் தென்கொரியாவை பரம விரோதியாக அறிவித்தார். மேலும் வடகொரியாவில் தென்கொரியா உடனான நட்புறவை குறிக்கும் வகையிலான நினைவு கட்டிடங்கள், சின்னங்கள் ஆகியவற்றை அழிக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் வடகொரியாவை தென்கொரியாவுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ரெயில் தண்டவாளங்களை வடகொரியா ராணுவம் கண்ணிவெடிகளை புதைத்தும், வெடிகுண்டுகளை வீசியும் தகர்த்து வருவதாக தென்கொரியா உளவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.