< Back
உலக செய்திகள்
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை- கனடா விசாரணை ஆணையம் அறிக்கை
உலக செய்திகள்

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை- கனடா விசாரணை ஆணையம் அறிக்கை

தினத்தந்தி
|
30 Jan 2025 8:41 PM IST

இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஒட்டாவா,

கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்கக் கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 123 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய தைத் தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பினர். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்