< Back
உலக செய்திகள்
ஜப்பானில் மலையேற்றத்துக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயம்
உலக செய்திகள்

ஜப்பானில் மலையேற்றத்துக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயம்

தினத்தந்தி
|
18 March 2025 6:08 AM IST

டோக்கியோவில் உள்ள பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பியூஜி எரிமலை அமைந்துள்ளது. நாட்டின் மிக உயரமான இந்த எரிமலை மலையேற்றத்துக்கு சிறந்த இடமாகவும் உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த சாகச வீரர்களும் இங்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டனர். எனவே பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக அங்கு சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த பியூஜி மலையில் ஏறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மலையேற்றத்தில் ஈடுபடும் சாகச வீரர்களுக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

மேலும் செய்திகள்