< Back
உலக செய்திகள்
2024 பிரபஞ்ச அழகி போட்டியில் மகுடம் சூடிய விக்டோரியா கெயர்
உலக செய்திகள்

2024 பிரபஞ்ச அழகி போட்டியில் மகுடம் சூடிய விக்டோரியா கெயர்

தினத்தந்தி
|
17 Nov 2024 6:01 PM IST

டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் என்கிற மாடல் பிரபஞ்ச அழகி பட்டத்த வென்றார்.

மெக்சிகோ,

மெக்சிகோவில் நடந்த 73வது பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க்கின் விக்டோரியா கெயர் தெல்விக் மகுடத்தை வென்றார். 21 வயதான அவர் மற்றும் இந்தியாவின் ரியா சிங்கா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 125 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக், இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு, "நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்" என்று பதிலளித்தார். இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் 2024 உலக அழகியாக விக்டோரியா கெயர் தெல்விக்கை அறிவித்தனர்.

இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உலக அழகியாவார். புதிய வரலாற்று சாதனை படைத்த விக்டோரியா தொழில்முனைவராகவும் இருக்கிறார். இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா பெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது.

முன்னதாக இந்தியாவை சேர்ந்த ரியா சிங்கா முதல் 12 இடங்களை பிடிக்கத் தவறியதால், பிரபஞ்ச அழகி 2024 போட்டிக்கான இந்தியாவின் நம்பிக்கை பொய்த்து போனது. அவர் முதல் 30 இடங்களை எட்டிய போதிலும், ஆரம்ப சுற்றுகளில் அசத்திய ரியா சிங்கா, ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரால் இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.

மேலும் செய்திகள்