< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்கா: ரெயிலில் பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற நபர் கைது
|24 Dec 2024 8:43 AM IST
இளம்பெண் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரெயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரெயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர் அவரது ஆடையில் தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அவர் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மன்ஹாட்டன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவா் சாதாரணமாக நடந்து சென்றார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில் இந்த கொலையை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.