அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; பள்ளிகளுக்கு விடுமுறை
|அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்நாட்டின் மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் பனிப்புயல் வீசி வருகிறது.
மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால் சாலை, ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலுடன், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பனிப்புயல் காரணமாக மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேரிலெண்ட் மாகாணத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பனிப்புயலால் 1 ஆயிரத்து 400க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன.
பனிப்புயல் தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.