< Back
உலக செய்திகள்
துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்
உலக செய்திகள்

துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்

தினத்தந்தி
|
6 Aug 2024 7:06 PM IST

ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ்டை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக இருந்தது.

இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர் கடந்த மாதம் ஜனாதிபதி ரேசில் இருந்து விலகினார். அவர் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தார். இதற்கிடையே ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளை அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ்டை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண கவர்னராக டிம் வால்ஸ் இருந்து வருகிறார். துணை ஜனாதிபதி வேட்பாளரான 60 வயதான டிம் வால்ஸ், மின்னெசோட்டா மாகாண எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்