கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
|கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
ஒட்டாவா,
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53) செயல்பட்டு வந்தார். 2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடாவின் ஜஸ்டின் செயல்பட்டு வந்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.
இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது. மேலும், சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.
கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்துள்ளார்.