< Back
உலக செய்திகள்
ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
7 July 2024 10:45 AM IST

டொராண்டோ நகரில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' போட்டியின் போது ஜான் சீனா, தனது ஓய்வை அறிவித்தார்.

டொராண்டோ,

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜான் சீனா

இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

.47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெசில்மேனியா 41-ல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார். இதன்படி 2025-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார்

மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடையில் தோன்றிய சம்பவத்திற்கு கலவையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. ஜான் சீனாவின் ஓய்வு குறித்த அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்