ஜப்பான் புதிய பிரதமராக இஷிபா தேர்வு
|பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் மந்திரியாக ஷிங்கெரு இஷிபா பணியாற்றி உள்ளார்.
டோக்கியோ,
ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளது. எனவே இக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். அதன்படி கடந்த 2021-ல் பிரதமர் புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இவரது அரசாங்கத்தின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. அதன்படி பிரதமர் வேட்பாளராக ஆளுங்கட்சி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற ஷிகெரு இஷிபா (வயது 67) பிரதமராக நேற்று தேர்வானார். இதனையடுத்து வருகிற 27-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன. இஷிபா, ஏற்கனவே, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் மந்திரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.