< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் சூறாவளியால் ரெயில், விமான சேவை பாதிப்பு: 3 பேர் பலி
|29 Aug 2024 10:09 AM IST
ஜப்பானில் கரையை கடந்த சூறாவளியால் கடும் மழை ஏற்பட்டு, தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டில் ஷான்ஷான் என்ற சூறாவளி கரையை கடந்துள்ளது. கியுஷு பகுதியில் சூறாவளி கரையை கடந்ததும், கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. பலத்த காற்று வீசியது. இதில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து கொள்ளும்படி தீவிர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சூறாவளியால் மின்விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது.
கடும் மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.